பதிகம் 80 / 136 · முதல் திருமுறை · திருஞானசம்பந்தர்

கோயில்

Koyil · 11 பாடல்கள் · 871–881

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 871

பண் · குறிஞ்சி

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமேசெற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயமுற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமேபற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொருள்

கற்று ஆங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

Meaning

Sin does not cleave to those who cleave to the foot of the first one of the unripe white moon, who dwells at the holy hall of Thillai where those who have conquered live, having learned and tended the fire there so that the kali does not come.

பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 872
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயபிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானைமறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.

பொருள்

பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

Meaning

See, those who do not forget the great one beyond birth, of the matted hair that hangs behind, who dwells at the holy hall of Thillai where the excellent live, who lay the birds down and, seeking the cow everywhere, tend the fire — they will be rid of delusion.

பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 873
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.

பொருள்

மை ஆர் ஒண் கண்ணார் மாட நெடு வீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்தச் செய்யான் உறை கோயில் சிற்றம்பலம் தானே.

Meaning

It is the holy hall itself, the temple where the red one dwells while the world praises, he who brought about the song of the unfailing scripture, in Thillai surrounded by the grove where the women of dark bright eyes throw the ball with their hands along the long streets of mansions.

பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 874
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேயஇறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.

பொருள்

நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்டப் பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லைச் சிறை வண்டு அறை ஓவாச் சிற்றம்பலம் மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

Meaning

The joy of praising the foot of the lord who dwells at the holy hall where the bees in their prison never cease their hum, at the great hall of Thillai where the crescent comes and strikes the roof so as to touch the peak of the mansions of full white banners — that joy is joy.

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 875
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.

பொருள்

செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

Meaning

The wealth of praising the foot of the wealthy one who dwells at the holy hall of Thillai where the wealthy live, where the rich tall mansions rise far and the wealth rises so that the rich moon touches them — that wealth is wealth.

பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 876
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேயகருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

பொருள்

வரும் ஆம் தளிர் மேனி மாதோர் பாகம் ஆம் திரும் ஆம் தில்லையுள் சிற்றம்பலம் மேய கரு மான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம் பெருமான் கழல் அல்லாற் பேணா துள்ளமே.

Meaning

The mind cares for nothing but the foot of our great one of the stained throat and the garment of the black deer's hide, who dwells at the holy hall in Thillai that is sacred, who is the half of the woman whose body is like a coming tender shoot.

பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 877
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்தலையால் வணங்குவார் தலையா னார்களே.

பொருள்

அலையார் புனல் சூடி ஆகத் தொரு பாகம் மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகு ஏத்தச் சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத் தலையால் வணங்குவார் தலையானார்களே.

Meaning

Those who bow with their heads to the holy hall itself, which the world praises, of him who wears the water with its waves and, as one half, rejoices with the daughter of the mountain, who shot the towns with his bow — they have become the head.

பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 878
கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்சீரா லேமல்கு சிற்றம் பலமேயநீரார் சடையானை நித்த லேத்துவார்தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.

பொருள்

கூர் வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் சீரால் மேல்கு சிற்றம்பலம் மேய நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீரல் திண்ணமே.

Meaning

It is certain that all their unending sicknesses end, those who praise daily the one of the matted hair full of water who dwells at the holy hall that grows in glory, having cut down the strength of the demon of the sharp sword.

பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 879
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்தமாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொருள்

கோணா கணையானும் குளிர் தாமரையானும் காணார் கழல் ஏத்தக் கனலாய் ஓங்கினான் சேண் ஆர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

Meaning

All their worthless sicknesses vanish of themselves for those who praise the holy hall of Thillai that dwells far, of him who rose up as flame while the one of the straight arrow and the one of the cool lotus praised his foot, not having seen it.

பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 880
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதேசிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயநட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.

பொருள்

பட்டைத் துவர் ஆடைப் படிமம் கொண்டு ஆடும் முட்டைக் கட்டு உரை மொழிவ கேளாதே சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

Meaning

Let us worship daily the dancing great one who dwells at the holy hall of Thillai where the accomplished live, taking the image of the bark-dyed red garment, not listening to the words that the bundle of eggs speaks.

பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 881
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேயசூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலைகோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

பொருள்

ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்து ஆர் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப் படையானைச் சொன்ன தமிழ் மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

Meaning

Those able to sing with beauty the Tamil garland that Sambandar of Kazhi, high in the world, spoke about the one of the trident who dwells at the holy hall whose practice is full of virtue — they are the good.

பாடலின் தனிப் பக்கம்