பண் · வியாழக்குறிஞ்சி
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
பொருள்
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்பாலே சேர்வாய் ஏனோர், கான் பயில் முனிவர்கள் கணமும் சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார்; நாள் நாள் நீள் கயிலைத் திகழ்தரு பரிசு எலாம் சந்தித்தே, இந்தப் பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வு ஆரத் தகவு செய்தவன் இடம் — கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே.
Meaning
The deathless who come bound and dwell on every side, those who take refuge in the far region, and the crowds of sages who live in the forest meditate and worship; he joins himself with the daughter of the mountain. He brought about that the people of this world should stand and see with their own eyes a life of joy in full measure, and the eminence of sitting day after day on tall Kailai met in him — his place is the fertile town of Kalumalam, where the sandal forest spreads its fragrance to the eight directions and flowers abound.