பதிகம் 56 / 136 · முதல் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருப்பாற்றுறை

Thiruppaatrurai · 11 பாடல்கள் · 606–616

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 606

பண் · பழந்தக்கராகம்

காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே.

பொருள்

காரார் கொன்றை கலந்த முடியினர், சீரார் சிந்தை செலச்செய்தார்; பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரார் ஆதி முதல்வரே.

Meaning

Whose crown is mingled with the dark golden shower, who makes the minds of the glorious go out to him; the first lord of Pattrurai, whom those who hold the earth praise daily, whom none can reach.

பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 607
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழும் ஈசரே.

பொருள்

நல்லாரும் அவர் தீயர் எனப்படுஞ் சொல்லார், நன்மலர் சூடினார்; பல்லார் வெண்டலைச் செல்வர் எம் பாற்றுறை, எல்லாரும் தொழும் ஈசரே.

Meaning

The good and those who are called bad — he does not say it; he wears good flowers; the rich one of many white skulls, our Pattrurai, the lord whom all worship.

பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 608
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் எண்ணார் வந்தென் எழில் கொண்டார் பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை யுண்ணா ணாளும் உறைவரே.

பொருள்

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர், எண்ணார் வந்து என் எழில் கொண்டார்; பண்ணார் வண்டினம் பாடல் செய் பாற்றுறை, உண்ணார் நாளும் உறைவரே.

Meaning

Whose brow is lit by the moon of the sky, they came without number and took my beauty; at Pattrurai, where bees of the melody make song, he who does not eat dwells daily.

பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 609
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவின் அல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே.

பொருள்

பூவும் திங்கள் புனைந்த முடியினர், ஏவின் அல்லார் எயில் எய்தார்; பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை, ஓவென் சிந்தை ஒருவரே.

Meaning

Whose crown is adorned with flowers and the moon, he struck the fort of those who would not come at his word; at Pattrurai, where the water that clears sin brims, he is the one alone in my mind that does not rest.

பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 610
மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை நாகம் பூண்ட நயவரே.

பொருள்

மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்தென, தாகம் பொன்னிறம் ஆக்கினார்; பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை, நாகம் பூண்ட நயவரே.

Meaning

Rejoicing in wearing the moon that touches the sky, he made the burning to a golden colour; he who has a woman for one half, of Pattrurai, the gracious one who wears a snake.

பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 611
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தென் நலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே.

பொருள்

போது பொன்று இகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்து என் நலம் கொண்டார்; பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை, வேதம் ஓதும் விகிர்தரே.

Meaning

The lord whose adorned crown has golden shower that withers as it blooms came and took my grace; of Pattrurai, whose feet the servants praise, the wondrous one who recites the Veda.

பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 612
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே.

பொருள்

வாடல் வெண்டலை சூடினர், மால் விடை கோடல் செய்த குறிப்பினார்; பாடல் வண்டினம் பண் செயும் பாற்றுறை, ஆடல் நாகம் அசைத்தாரே.

Meaning

He wears the white skull that withers, and his intent was to take the great bull; at Pattrurai, where bees of song make melody, he made the dancing snake sway.

பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 613
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார் பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே.

பொருள்

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர், எவ்வம் செய்து என் எழில் கொண்டார்; பவ்வம் நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை, மவ்வல் சூடிய மைந்தரே.

Meaning

Of a hot body and white ash, he made trouble and took my beauty; the one whose throat holds the spreading poison, our Pattrurai, the youth who wears the mavval flower.

பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 614
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி ஆன வண்ணத்தெம் அண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே.

பொருள்

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி ஆன வண்ணத்து எம் அண்ணலார்; பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை, வான வெண்பிறை மைந்தரே.

Meaning

Our lord of the colour that became fire for those who became boar and swan; of Pattrurai, where the fair mullai flowers swell, the youth of the white crescent in the sky.

பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 615
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வௌவினார் பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.

பொருள்

வெந்த நீற்றினர், வேலினர், நூலினர், வந்து என் நன்னலம் வௌவினார்; பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை, மைந்தர் தாமோர் மணாளரே.

Meaning

Smeared with burnt ash, bearing the spear, wearing the thread, he came and seized my good grace; of Pattrurai, ringed by the cool green madhavi, the youth is a bridegroom.

பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 616
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரானைப் பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ் பத்தும் பாடிப் பரவுமே.

பொருள்

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரானைப் பத்தன் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் பாடிப் பரவுமே.

Meaning

Sing and praise the ten Tamil verses of Sambandar, the servant, on him of the hundred and ten names who dwells at Pattrurai, where his servants abide.

பாடலின் தனிப் பக்கம்