பண் · குறிஞ்சி
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றைநம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
பாடலின் தனிப் பக்கம்
பண் · குறிஞ்சி
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றைநம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
பாடலின் தனிப் பக்கம்
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
பாடலின் தனிப் பக்கம்
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோகநல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
பாடலின் தனிப் பக்கம்
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோர் அனலேந்தும்நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
பாடலின் தனிப் பக்கம்
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்திகுலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்தசிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
பாடலின் தனிப் பக்கம்
மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
பாடலின் தனிப் பக்கம்
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
பாடலின் தனிப் பக்கம்
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்தநாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
பாடலின் தனிப் பக்கம்
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்றுகுரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
பாடலின் தனிப் பக்கம்
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்பஅருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
பாடலின் தனிப் பக்கம்
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
பாடலின் தனிப் பக்கம்