Verse 2063 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 1 of 11
பண் · சீகாமரம்
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.1
விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணையாலெய் தாய்வரி பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறைசேர்நு தலிடைக் கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.