Pathigam 53 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thiruppuravaar Pananggaattoor

திருப்புறவார் - பனங்காட்டூர் · 11 verses · 2063–2073

Share

பாடல்கள் The verses

1 Verse 2063

பண் · சீகாமரம்

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணையாலெய் தாய்வரி பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறைசேர்நு தலிடைக் கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.
Open this verse
2 Verse 2064
நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்மலர்நிரைத் தாத ளஞ்செயப் பாடல் வண்டறையும்புறவார் பனங்காட்டூர்த் துளங்க வெண்குழை துள்ளநள்ளிருள் ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.
Open this verse
3 Verse 2065
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரையருகெ லாம்வயற் பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனைவாய்க ழலிணைத் தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.
Open this verse
4 Verse 2066
மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின்மேதி வைகறை பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென்றரற்றி நன்மலர் சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.
Open this verse
5 Verse 2067
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல்தேனி னத்தொடு பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங்கூடி மான்மறி அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.
Open this verse
6 Verse 2068
நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில்சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகைகூப்பி நாடொறுஞ் சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.
Open this verse
7 Verse 2069
கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க்காந்த ளங்குறி பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்மெய்ய ரிவையோர் பாக மாகவும் மேவி னாய்கழலேத்தி நாடொறும் பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.
Open this verse
8 Verse 2070
தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கியதூமலர்ப் பொய்கைப் பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன்பாடல் கேட்டருள் ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.
Open this verse
9 Verse 2071
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மரவிந்த மல்லிகை பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரிதாய்நி மிர்ந்ததொர் சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
Open this verse
10 Verse 2072
நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர்கவ்வி நேரிசை பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கியருந்ந கத்தலை ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.
Open this verse
11 Verse 2073
மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப்பூசும் மார்பனைப் பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறைஞான சம்பந்தன் செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
Open this verse