பண் · இந்தளம்
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகைதேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடிஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.
Open this verse
பண் · இந்தளம்
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகைதேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடிஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.
Open this verse
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியேஅடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.
Open this verse
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடியசேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.
Open this verse
கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.
Open this verse
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகுதெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவேதங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.
Open this verse
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடிகண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.
Open this verse
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிஉன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.
Open this verse
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலைபற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவேசெற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிஉற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.
Open this verse
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.
Open this verse
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.
Open this verse
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடைவெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.
Open this verse