Pathigam 60 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thiruppaasoor

திருப்பாசூர் · 11 verses · 2140–2150

Share

பாடல்கள் The verses

1 Verse 2140

பண் · காந்தாரம்

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
Open this verse
2 Verse 2141
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.
Open this verse
3 Verse 2142
கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.
Open this verse
4 Verse 2143
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.
Open this verse
5 Verse 2144
ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
Open this verse
6 Verse 2145
கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார்ஊர்போலும் பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.
Open this verse
7 Verse 2146
கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னிஎண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.
Open this verse
8 Verse 2147
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையேபேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
Open this verse
9 Verse 2148
நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
Open this verse
10 Verse 2149
தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
Open this verse
11 Verse 2150
ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.
Open this verse