பண் · காந்தாரம்
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணிபுரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பைஅரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாயபரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
Open this verse
பண் · காந்தாரம்
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணிபுரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பைஅரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாயபரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
Open this verse
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழிகோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
Open this verse
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழிநிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
Open this verse
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழிதங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
Open this verse
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழிஇன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பைநன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்லபொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
Open this verse
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்டஅண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழிவிண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்துகண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
Open this verse
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்லஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழிஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிபேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
Open this verse
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழிநறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்துதிறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
Open this verse
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாதவெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
Open this verse
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்யகொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாயவிழுமியசீர் வெங்குருவோ டோங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
Open this verse
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழிநிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
Open this verse
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலைநாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்னமேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.
Open this verse