பண் · காந்தாரம்
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழிவலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்திஅலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
Open this verse
பண் · காந்தாரம்
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழிவலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்திஅலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
Open this verse
ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்துகாரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழிநீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்றுபேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.
Open this verse
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழிமுடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்திஅடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.
Open this verse
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணிநினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.
Open this verse
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலேகருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.
Open this verse
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டுகந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.
Open this verse
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்தமுயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.
Open this verse
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக் கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப் பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல் பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.
Open this verse
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.
Open this verse
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.
Open this verse
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.
Open this verse