பண் · நட்டராகம்
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
Open this verse
பண் · நட்டராகம்
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
Open this verse
அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.
Open this verse
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.
Open this verse
கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.
Open this verse
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடிமறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.
Open this verse
வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூவெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.
Open this verse
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.
Open this verse
சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனைஅடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.
Open this verse
களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடிஉளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.
Open this verse
புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனைஉத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.
Open this verse
கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவேகுற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.
Open this verse