Pathigam 81 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thiruvenuburam

திருவேணுபுரம் · 11 verses · 2374–2384

Share

பாடல்கள் The verses

1 Verse 2374

பண் · காந்தாரம்

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்துவேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
Open this verse
2 Verse 2375
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
Open this verse
3 Verse 2376
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
Open this verse
4 Verse 2377
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவேசீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
Open this verse
5 Verse 2378
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டுசோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
Open this verse
6 Verse 2379
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
Open this verse
7 Verse 2380
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
Open this verse
8 Verse 2381
இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.
Open this verse
9 Verse 2382
தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டுசேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
Open this verse
10 Verse 2383
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியேநிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
Open this verse
11 Verse 2384

குறிப்பு இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

Open this verse