Pathigam 55 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thirutthalaicchanggaadu

திருத்தலைச்சங்காடு · 11 verses · 2085–2095

Share

பாடல்கள் The verses

1 Verse 2085

பண் · காந்தாரம்

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.
Open this verse
2 Verse 2086
துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கைஅணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
Open this verse
3 Verse 2087
பிணி - பிணித்தல் சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.
Open this verse
4 Verse 2088
வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Open this verse
5 Verse 2089
சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
Open this verse
6 Verse 2090
நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்துபுலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கைநலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.
Open this verse
7 Verse 2091
அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
Open this verse
8 Verse 2092
திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானைவரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கைநிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.
Open this verse
9 Verse 2093
பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
Open this verse
10 Verse 2094
அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கைநிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.
Open this verse
11 Verse 2095
நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானைஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.
Open this verse