Pathigam 93 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thirutthenggoor

திருத்தெங்கூர் · 11 verses · 2506–2516

Share

பாடல்கள் The verses

1 Verse 2506

பண் · பியந்தைக்காந்தாரம்

புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
2 Verse 2507
சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்தவித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
3 Verse 2508
அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
4 Verse 2509
பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்திவிண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
5 Verse 2510
சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவைகழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாகவிழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
6 Verse 2511
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்றவில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
7 Verse 2512
நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசிவெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
8 Verse 2513
எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
Open this verse
9 Verse 2514
தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.
Open this verse
10 Verse 2515
சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிரஇடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்தவிடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே
Open this verse
11 Verse 2516
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.
Open this verse