பண் · இந்தளம்
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.
Open this verse
பண் · இந்தளம்
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.
Open this verse
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.
Open this verse
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.
Open this verse
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.
Open this verse
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.
Open this verse
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.
Open this verse
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.
Open this verse
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.
Open this verse
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர் சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.
Open this verse
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.
Open this verse
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரைஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.
Open this verse