Pathigam 24 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thirunaageccharam

திருநாகேச்சரம் · 11 verses · 1747–1757

Share

பாடல்கள் The verses

1 Verse 1747

பண் · இந்தளம்

பொன்னேர் தருமே னியனே புரியும்மின்னேர் சடையாய் விரைகா விரியின்நன்னீர் வயல்நா கேச்சர நகரின்மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.
Open this verse
2 Verse 1748
சிறவார் புரமூன் றெரியச் சிலையில்உறவார் கணையுய்த் தவனே உயரும்நறவார் பொழில்நா கேச்சர நகருள்அறவா எனவல் வினையா சறுமே.
Open this verse
3 Verse 1749
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்வில்லான் எழில்வே வவிழித் தவனேநல்லார் தொழுநா கேச்சர நகரில்செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.
Open this verse
4 Verse 1750
நகுவான் மதியோ டரவும் புனலும்தகுவார் சடையின் முடியாய் தளவம்நகுவார் பொழில்நா கேச்சர நகருள்பகவா எனவல் வினைபற் றறுமே.
Open this verse
5 Verse 1751
கலைமான் மறியுங் கனலும் மழுவும்நிலையா கியகை யினனே நிகழும்நலமா கியநா கேச்சர நகருள்தலைவா எனவல் வினைதான் அறுமே.
Open this verse
6 Verse 1752
குரையார் கழலா டநடங் குலவிவரையான் மகள்கா ணமகிழ்ந் தவனேநரையார் விடையே றுநாகேச் சரத்தெம்அரைசே எனநீங் கும்அருந் துயரே.
Open this verse
7 Verse 1753
முடையார் தருவெண் டலைகொண் டுலகில்கடையார் பலிகொண் டுழல்கா ரணனேநடையார் தருநா கேச்சர நகருள்சடையா எனவல் வினைதான் அறுமே.
Open this verse
8 Verse 1754
ஓயா தஅரக் கன்ஒடிந் தலறநீயா ரருள்செய் துநிகழ்ந் தவனேவாயா ரவழுத் தவர்நா கேச்சரத்தாயே எனவல் வினைதான் அறுமே.
Open this verse
9 Verse 1755
நெடியா னொடுநான் முகன்நே டலுறச்சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனேநடுமா வயல்நா கேச்சர நகரேஇடமா வுறைவா யெனஇன் புறுமே.
Open this verse
10 Verse 1756
மலம்பா வியகை யொடுமண் டையதுண் கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் நலம்பாவியநா கேச்சர நகருள் சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.
Open this verse
11 Verse 1757
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்தலமார் தருசெந் தமிழின் விரகன்நலமார் தருநா கேச்சரத் தரனைச்சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே.
Open this verse