பண் · நட்டராகம்
படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமேகுடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
பண் · நட்டராகம்
படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமேகுடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதேகொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமேவளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவைஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொருகூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse
கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.
Open this verse