Pathigam 17 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thiruvenuburam

திருவேணுபுரம் · 11 verses · 1670–1680

Share

பாடல்கள் The verses

1 Verse 1670

பண் · இந்தளம்

நிலவும் புனலும் நிறைவா ளரவும்இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்உலவும் வயலுக் கொளியார் முத்தம்விலகுங் கடலார் வேணு புரமே.
Open this verse
2 Verse 1671
அரவார் கரவன் அமையார் திரள்தோள்குரவார் குழலா ளொருகூ றனிடங்கரவா தகொடைக் கலந்தா ரவர்க்குவிரவா கவல்லார் வேணு புரமே.
Open this verse
3 Verse 1672
ஆகம் மழகா யவள்தான் வெருவநாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்மேகந் தவழும் வேணு புரமே.
Open this verse
4 Verse 1673
காசக் கடலில் விடமுண் டகண்டத்தீசர்க் கிடமா வதுஇன் னறவவாசக் கமலத் தனம்வன் றிரைகள்வீசத் துயிலும் வேணு புரமே.
Open this verse
5 Verse 1674
அரையார் கலைசேர் அனமென் னடையைஉரையா வுகந்தா னுறையும் இடமாம்நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடைவிரையார் பொழில்சூழ் வேணு புரமே.
Open this verse
6 Verse 1675
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்நளிரும் புனலின் னலசெங் கயல்கள்மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.
Open this verse
7 Verse 1676

குறிப்பு இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

Open this verse
8 Verse 1677
ஏவும் படைவேந் தன்இரா வணனைஆவென் றலற அடர்த்தா னிடமாந்தாவும் மறிமா னொடுதண் மதியம்மேவும் பொழில்சூழ் வேணு புரமே.
Open this verse
9 Verse 1678
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்அண்ணல் இருவர் அறியா இறையூர்வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்விண்ணிற் றிகழும் வேணு புரமே.
Open this verse
10 Verse 1679
போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்ஆகம் மறியா அடியார் இறையூர்மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்மீகம் மறிவார் வேணு புரமே.
Open this verse
11 Verse 1680
கலமார் கடல்போல் வளமார் தருநற்புலமார் தருவே ணுபுரத் திறையைநலமார் தருஞா னசம்பந் தன்சொன்னகுலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.
Open this verse