பண் · இந்தளம்
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
Open this verse
பண் · இந்தளம்
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
Open this verse
கடலே றியநஞ் சமுதுண் டவனேஉடலே உயிரே உணர்வே யெழிலேஅடலே றுடையாய் அழுந்தை மறையோர்விடலே தொழமா மடம்மே வினையே.
Open this verse
கழிகா டலனே கனலா டலினாய்பழிபா டிலனே யவையே பயிலும்அழிபா டிலராய் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
Open this verse
வானே மலையே யெனமன் னுயிரேதானே தொழுவார் தொழுதாள் மணியேஆனே சிவனே அழுந்தை யவரெம்மானே யெனமா மடம்மன் னினையே.
Open this verse
அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்இலையார் படையும் மிவையேந் துசெல்வநிலையா வதுகொள் கெனநீ நினையே.
Open this verse
நறவார் தலையின் நயவா வுலகிற்பிறவா தவனே பிணியில் லவனேஅறையார் கழலாய் அழுந்தை மறையோர்மறவா தெழமா மடம்மன் னினையே.
Open this verse
தடுமா றுவல்லாய் தலைவா மதியம்சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்நெடுமா நகர்கை தொழநின் றனையே.
Open this verse
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்வெரியார் தொழமா மடம்மே வினையே.
Open this verse
மணீநீள் முடியான் மலையை அரக்கன்தணியா தெடுத்தான் உடலந் நெரித்தஅணியார் விரலாய் அழுந்தை மறையோர்மணிமா மடம்மன் னியிருந் தனையே.
Open this verse
முடியார் சடையாய் முனநா ளிருவர்நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்அடிமே லறியார் அழுந்தை மறையோர்படியாற் றொழமா மடம்பற் றினையே.
Open this verse
அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்பெருஞா னமுடைப் பெருமா னவனைத்திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.
Open this verse