பண் · செவ்வழி
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
Open this verse
பண் · செவ்வழி
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
Open this verse
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவேமுள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனைஉள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.
Open this verse
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
Open this verse
போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறைஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.
Open this verse
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலைநாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
Open this verse
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.
Open this verse
கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.
Open this verse
வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடைஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனைநோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
Open this verse
அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னைபொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.
Open this verse
உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
Open this verse
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.
Open this verse