Pathigam 37 / 122 · Second Thirumurai · Thirugnanasambandar

Thirumaraikkaadu Kadhavadaikkappaadiyabadhigam

திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம் · 11 verses · 1888–1898

Share

பாடல்கள் The verses

1 Verse 1888

பண் · இந்தளம்

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாஇதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
Open this verse
2 Verse 1889
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தாமங்கை உமைபா கமுமா கவிதென்கொல்கங்கை சடைமே லடைவித்த கருத்தே.
Open this verse
3 Verse 1890
குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாசிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்அரவம் மதியோ டடைவித்த லழகே.
Open this verse
4 Verse 1891
படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாஉடலம் முமைபங்க மதாகியு மென்கொல்கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.
Open this verse
5 Verse 1892
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்டதேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வாஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்கானார் கடுவே டுவனான கருத்தே.
Open this verse
6 Verse 1893
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றிமலரால் வழிபாடு செய்மா மறைக்காடாஉலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
Open this verse
7 Verse 1894
வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வாமாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.
Open this verse
8 Verse 1895
கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடாஇலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்தஅலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.
Open this verse
9 Verse 1896
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வாஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.
Open this verse
10 Verse 1897
வேதம் பலவோமம் வியந்தடி போற்றஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.
Open this verse
11 Verse 1898
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்தஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.
Open this verse