Verse 6927 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 7 of 10
திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.7
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடிமையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.