Verse 6932 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 2 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.2

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்நானேதும் அறியாமே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்தேனாருங் கொன்றையனே நின்றி யூராய் திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
Share