Verse 6935 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 5 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.5
இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத் திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்கைம்மான மனத்துதவிக் கருணை செய்து காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்வெம்மான மதகரியி னுரிவை போர்த்த வேதியனே தென்னானைக் காவுள் மேயஅம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.