Verse 6930 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 10 of 10

திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றிமுனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
Share