Verse 6933 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 3 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.62.3
ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான் ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்றுதுப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.