Verse 6963 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 2 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.2
நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றைவாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.