Verse 6965 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 4 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.4
பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண் பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்றசீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ் செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்தஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.