Verse 6969 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 8 of 10

திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.8

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண் தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண் ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண் வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Share