Verse 6966 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 5 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.5
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண் பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண் வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்தஇருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.