Verse 6964 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 3 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.3
பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண் வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.