Verse 6967 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 6 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.6
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும் அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமைகாய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங் கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.