Verse 6968 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 7 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.7
உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண் உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்இமய வடகயிலைச் செல்வன் றான்காண் இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண் தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாயஇமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.