Verse 7060 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 6 of 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.6

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
Share