Verse 7061 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 7 of 11
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.7
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக் கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ் சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம் பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.