Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 3 of 10
ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமேபூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனிதப் பொருளாகி நின்றார் தாமேபாவுற்ற பாட லுகப்பார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதேவுற் றடிபரவ நின்றார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.