verse 29 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 29
மின்மினி விளக்கத்தி னிருள்கடிந் தன்னவிண்மேதினி யுதித்தொடுங்கும்வேறுதெய் வதவடிவை நாடித் துதித்தென்கொல்வினையினிருள் சீக்குமிரவிநின்மிருது பங்கயப் பாதமென நாடொறுநினைத்துந் துதித்துமொருநீநெஞ்சக மிரங்காமல் வஞ்சகஞ் செய்வதுவுநீதியோ காத்தருளுவாய்கொன்மின் னடுங்கவுடல் குத்துமின் கடவுளர்குழாந்தனைப் பற்றியீண்டுகொணர்மினென வேபரிதி கோபனை விடுத்தவன்கொடியன்முத லோருயிரெலாஞ்சென்மினென வுடல்கிழித் தேறவடி வேறொட்டசெங்கைமுரு கற்கன்னையாதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.