verse 34 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 34
இந்தரசா லம்போல வந்துவந் தேமறையுமிந்தப்ர வஞ்சவாழ்விலெத்தனை பெருக்கமோ வெத்தனை சுருக்கமோவிவ்வண்ண நீவகுத்ததந்த்ரம்வெகு நீதமோ வெவ்வுயிர்க் கும்பெற்றதாயாகி லொன்றுபோலுந்தயவுசெய் யாமலிப் பேதப் படுத்துவதுதகைமையோ சொல்கவம்மாமந்த்ரபஞ் சாக்கர சொரூபமே வாடாதுவளர்தெய்வ குலதீபமேவாய்ந்தசெக சாட்சியே சிவஞான காட்சியேவளர்புன்னை யங்காட்டில்வாழ்செந்திரவி யப்பெருங் குன்றவில் லானைத்திருத்தக மணக்குமம்மேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.