Verse 6715 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumazhabaadi Thirutthaandagam · Verse 7 of 10
திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.7
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்பாராகிப் பௌவமே ழானான் கண்டாய் பகலாகி வானாகி நின்றான் கண்டாய்ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய் அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.