Verse 6747 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 1 of 10
பண் · திருத்தாண்டகம்
திருச்சோற்றுத்துறை · 6.44.1
மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானேஏத்தவனா யேழுலகு மாயி னானே இன்பனாய்த் துன்பங் களைகின் றானேகாத்தவனா யெல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.