Verse 6748 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 2 of 10
திருச்சோற்றுத்துறை · 6.44.2
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானேநிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்தகொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்தசிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.