Verse 6754 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 8 of 10
திருச்சோற்றுத்துறை · 6.44.8
தன்னவனா யுலகெல்லாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானேஎன்னவனா யென்னிதயம் மேவி னானே ஈசனே பாச வினைகள் தீர்க்கும்மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
குறிப்பு பாடல்கள் 6.44.3, 6.44.4, 6.44.5, 6.44.6, 6.44.7 கிடைக்கவில்லை