Verse 6758 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 2 of 10
திருவொற்றியூர் · 6.45.2
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி அணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப்பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார் பசுவேறி உழிதருமெம் பரம யோகிகாமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக் கனலா எரிவிழித்த கண்மூன் றினார்ஓமத்தால் நான்மறைக ளோத லோவா ஒளிதிகழு மொற்றியூர் உறைகின் றாரே.
குறிப்பு பாடல்கள் 6.44.8, 6.44.9, 6.44.10, 6.45.1 கிடைக்கவில்லை