Verse 6763 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 7 of 10
திருவொற்றியூர் · 6.45.7
வல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்எல்லையெம் பெருமானைக் காணோ மென்ன எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாமிருக்கு மூர்பணியீர் அடிகே ளென்னஒல்லைதான் திரையேறி யோதம் மீளும் ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.
குறிப்பு பாடல்கள் 6.45.2, 6.45.3, 6.45.4, 6.45.5, 6.45.6 கிடைக்கவில்லை