Verse 6765 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 9 of 10
திருவொற்றியூர் · 6.45.9
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லைஎண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை இரவல்லை பகலல்லை யாவு மல்லைபெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயேஉண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.