Verse 6950 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 10 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.10

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப் பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத் தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதேஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதேதீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
Share