Verse 6949 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 9 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.9
நசையானை நால்வேதத் தப்பா லானை நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னைஇசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும் மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்திசையானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.