Verse 6944 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 4 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.4

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக் காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்தாரானைப் புலியதளி னாடை யானைத் தானன்றி வேறொன்று மில்லா ஞானப்பேரானை மணியார மார்பி னானைப் பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்டதேரானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
Share