Verse 6946 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 6 of 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.6

கலையானைப் பாசுபதப் பாணி யானைக் கனவயிரத் திரளானை மணிமா ணிக்கமலையானை யென்றலையி னுச்சி யானை வார்தருபுன் சடையானை மயான மன்னும்நிலையானை வரியரவு நாணாக் கோத்து நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்சிலையானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
Share