Verse 6947 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaanaikkaa Thirutthaandagam · Verse 7 of 10
திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.7
ஆதியனை எறிமணியின் ஓசை யானை அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்கசோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச் சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்டவேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்சேதியனைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.